வை-பை குப்பைத்தொட்டி

Related image


பொது (புது) இடங்களுக்குச் செல்லும்போது அருகே வை-பை வசதி எங்கே இருக்கிறது என அறிந்துகொள்ளும் ஆர்வமும் தேவையும் உண்டாகும் (இலவசச் சேவையாக இருந்தால் இன்னும் நல்லது!). இந்தக் கேள்விக்கு விடையாக மட்டும் அல்ல போனசாகப் பரிசு அளிக்கும் வகையில் புதுமையான யோசனையை மும்பை இளைஞர்கள் பரதீக் அகர்வால் மற்றும் ராஜ் தேசாய் முன்வைத்துள்ளனர். இருவரும் வை-பை வசதி கொண்ட குப்பைத்தொட்டியை வடிவமைத்துள்ளனர். இந்தக் குப்பைத்தொட்டியில் குப்பையை போடும் ஒவ்வொரு முறையும் அதில் ஒரு எண் பளிச்சிடும். அந்த எண்ணைக் கொண்டு இலவச வை-பை இணைப்பு வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

டென்மார்க் போன்ற நாடுகளில் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதைப் பார்த்து வியந்தபோது அதே போன்ற நிலையை இந்தியாவில் உண்டாக்க வேண்டும் என்றால் மக்கள் அணுகுமுறையில் மாற்றம் தேவை என உணர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் குப்பை போட்டால் வை-பை புள்ளிகளாகப் பரிசளிக்கும் இந்த நவீனக் குப்பைத்தொட்டி மாதிரியை வடிவமைத்ததாக இருவரும் கூறியுள்ளனர். அதே நேரத்தில் வை-பை இணைப்பு தொடர்பான தேடலுக்கும் இது தீர்வாகும் என்கிறனர். அதாவது வை-பை இணைப்பையும் அளிக்கும், குப்பைத்தொட்டியில் குப்பை போடும் பழக்கத்தையும் ஊக்குவிக்கும். இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும் அல்லவா?

Comments

Popular posts from this blog

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி !

ஏர் மவுஸ் !!

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials