ஃபேஸ்புக்கில் பவர்பாயிண்ட்
மாநாடு, கருத்தரங்கு, அலுவலகக் கூட்டங்கள் என்றால் பவர்பாயிண்ட் காட்சி
விளக்கம் தானாக நினைவுக்கு வரும். அலுப்பூட்டக்கூடியது என்று சிலர்
விமர்சித்தாலும் மணிக்கணக்காகப் பேச வேண்டிய விஷயங்களைக் கூட பவர்பாயிண்ட்
காட்சி விளக்கமாக கச்சிதமாக முன்வைக்கலாம்.
இப்போது பவர்பாயிண்ட் சேவையை மேலும் சுவாரஸ்யமாக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. மைரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்' எனும் பெயரில் ‘பிளக் இன்' வசதியாக இதை அறிமுகம் செய்துள்ளது.
இப்போது பவர்பாயிண்ட் சேவையை மேலும் சுவாரஸ்யமாக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. மைரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்' எனும் பெயரில் ‘பிளக் இன்' வசதியாக இதை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்லைடுகளைப் பார்த்து ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் பவர்பாயிண்ட் செயலியிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
அது மட்டுமல்ல, காட்சி விளக்கங்களை நேரடியாக ‘ஒன்டிரை’வில் கோப்பாக சேமித்துக்கொள்ளலாம்.
பவர்பாயிண்ட்டுக்கு மிகவும் தேவையான அப்டேட்தான் இல்லையா?
புதிய திட்டங்களில் ஈடுபட மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ‘மைக்ரோசாஃப்ட் கராஜ்' திட்டத்தின் கீழ் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய குழுவில் நம்மவரான வித்யாராமன் சங்கரநாராயணனும் இடம்பெற்றுள்ளார்.
மாநாடு போன்றவற்றில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் அளிக்கும்போது ட்விட்டரில் அதைப் பகிர்ந்துகொண்டால் பார்வையாளர்கள் அதன் மீது கருத்து தெரிவிப்பது சாத்தியமாகலாம். அதற்கு கேள்வி பதில் நேரத்தின்போது அழகாக பதிலும் சொல்லலாம் என்கிறார் அவர்.
Comments
Post a Comment