இலைச்சருகுகளில் இருந்து பவர்பேங்க் தயாரிக்கும் சீனா !!

Image result for leaves dust

இயற்கை கொடுத்த அரிய வரப்பிரசாதம் மரங்கள். அவை வளரும் பருவத்தில் இருந்தே சுற்றுப்புறச்சூழலுக்கும் மனிதனுக்கும் நன்மைதான் செய்யும். மரங்களை உபயோகத்திற்காக வெட்டப்பட்டும் கூட, அதன் உபயோகத்திற்குப் பின்னர் மட்கிவிடும். இயற்கை விவசாயத்தில் மரங்களின் இலை தழைகள் மண்ணுக்கு உரமாகவும் பயன்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்புகளைக் கொடுக்கக் கூடியதாகவும் விளங்கக் கூடிய பிளாஸ்டிக்குகள் வந்ததால் மக்கள் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இன்றைய நவீன உலகில் பிளாஸ்டிக் பொருள்கள் இன்றி வாழ முடியாத அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளோம். அப்படிப் பயன்படுத்தும் பொருள்களில் முக்கியமான இடம் மின்சார சேமிப்பு சாதனங்களுக்கானதாக இருக்கும். மொபைலில் இருக்கும் பேட்டரி, பவர் பேங், வாகனத்தின் பேட்டரி எனப் பல விதங்களில் பிளாஸ்டிக் பொருள்களே அதிகம். ஆனால், பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக மரங்களின் இலைச்சருகால் ஆன, பேட்டரி கிடைத்தால் மகிழ்ச்சிதானே. ஆம், விரைவில் வரப்போகிறது, இலைச்சருகுகளின் பேட்டரிகள்... 


இலைச்சருகுகளை எரிப்பதற்கு மாற்றாகக் களமிறங்கிய சீனாவில் உள்ள கில்லு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் அதில் வெற்றியும் கண்டுள்ளனர். மர இலைச்சருகுகளை மின்சாரத்தைத் தேக்கி வைக்கும் சாதனங்களாக மாற்றியுள்ளனர். இந்தச் சாதனங்கள் பயன்படுத்திய பிறகு இயற்கையாகவே இருக்கும். இதனால் வெளியாகும் கரிய அமில வாயு, எரிக்கும்போது வெளியாகும் கரிய அமில வாயுவை விடக் குறைவாக இருக்கும். இன்றைய நிலையில் மின்சாரத்தைச் சேமிக்க பயன்படுத்தும் அனைத்தும் பிளாஸ்டிக்குகளாகவே இருக்கிறது. "இந்த மாணவர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தால், பிளாஸ்டிக் பயன்பாடு பெரிய அளவில் குறையும். இலைச்சருகுகளால் எரிக்கும்போது காற்று மண்டலமும் மாசுபடாமல் இருக்கும். இவர்கள் கண்டுபிடித்த முறையில் சருகுகளைச் சாதனமாக வடிவமைத்தால் சிறிய அளவிலான கார்பன் டை ஆக்ஸைடு வெளியாகும். இதுதவிர, எந்த ஒரு கழிவுப்பொருளின் பயன்பாடும் நல்லதுதானே" என்கிறார், பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கரோலின் புர்கெஸ் கிளிஃபோர்ட்.

 

சேகரிக்கப்பட்ட இலைச்சருகுகளை நன்கு தூளாக அரைத்து உலர்த்திவிட வேண்டும். உலர்ந்த பின்னர் துகள்ளைச் சேகரித்து தண்ணீரில் போட்டு அதில் மிஞ்சும் சாம்பலை 220 டிகிரி வெப்பத்தில் சூடேற்றி வடிகட்டி கார்பன் துகள்களைப் பிரிக்க வேண்டும். பிரிக்கப்பட்ட துகள் பழுப்பு நிறமாகக் காணப்படும். அத்துகளுடன் திரவ நிலையிலுள்ள பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடை சேர்த்து 800 டிகிரி செல்சியஸ் வரை மீண்டும் சூடுபடுத்த வேண்டும். அவ்வாறு சூடுபடுத்தும்போது துகள்களில் உள்ள மிக நுண்ணிய தேவையற்ற பொருள்களும் வெளியேறிவிடும். இதனால் மின்சாரத்தை அதிகமாகத் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய தன்மையைப் பெறுகிறது. இந்தச் செயல்முறை பழைய முறைதான் என்றாலும், அதில் மரங்கள், கரிம பொருள்கள் என உபயோகப்படுத்துவர். ஆனால், இம்மாணவர்களின் முயற்சி வீணாகும் சருகுகளை நோக்கித் திரும்பியது சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான். இதுதவிர மற்ற மின்சார சேமிப்பு சாதனங்களை விட இது சிறப்பாக செயலாற்றும், இயற்கைக்கு உகந்ததும் கூட. எளிதாக, மரச்சருகினால் உருவான பவர்பேங் என்றும், சொல்லலாம். இக்கண்டுபிடிப்பு பிளாஸ்டிக்குகளை ஒழிப்பதில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்பது நிச்சயம்.



Comments

Popular posts from this blog

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials

Encrypted smartphones secure your identity, not just your data

அலர வைக்கும் அலாரம்