செயற்கை இறைச்சி !!

செயற்கை இறைச்சியைக் கண்டுபிடித்துள்ளார் நெதெர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர். திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை இறைச்சி அடுத்த பத்து வருடங்களில் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் சாத்தியமுள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் இறைச்சி தட்டுப்பாடு மற்றும் இறைச்சிக்காக விலங்குகள் பலியிடுவது குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
தசையிலிருந்து எடுக்கப்படும் ஒரே ஒரு திசுவின் மூலம் இந்த செயற்கை
இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாட்டின் திசுவிலிருந்து இந்த
இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியில்
உருவாக்கப்பட்ட இந்த செயற்கை இறைச்சி தற்போது சாப்பிடக்கூடிய அளவுக்கு
மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இறைச்சி தேவைகளும் உள்ளது. இதை சமாளிக்கக்கூடிய அளவுக்கு இறைச்சிக்காக விலங்குகள் வளர்ப்பு அதிகரிக்கப்படவில்லை. ஆனால் இந்த செயற்கை இறைச்சி உற்பத்தி மூலம் ஒரு திசுவைக் கொண்டு சுமார் 10 ஆயிரம் கிலோ இறைச்சி உருவாக்க முடியும்.

Comments
Post a Comment