காற்றின் தரம் அறிய

'ஹெல்ப்சாட்' செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம். ஸ்மார்ட்போன்
பயனாளிகளின் டிஜிட்டல் உதவியாளராக செயல்பட்டு பயனுள்ள தகவல்களை அளிக்கக்
கூடிய இந்தச் செயலி தற்போது இந்திய நகரங்களில் காற்றின் தரத்தை
அறிந்துகொள்ள வழி செய்யும் தகவல்களையும் அளிக்கத் தொடங்கியிருக்கிறது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்களைப் பிரதானமாக வைத்துக்கொண்டு இந்தச் சேவையை ஹெல்ப்சாட் அளிக்கிறது. காற்றின் தரம் பற்றிய விவரம் ஆறு பிரிவுகளில் பச்சை முதல் சிவப்பு வரையான வண்ணங்களில் உணர்த்தப்படுகிறது. காற்று மாசு அடிப்படையில் எந்தெந்த இடங்களைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்ய இது உதவலாம்.

https://www.helpchat.in/
Comments
Post a Comment