இணையம் வேகமாக இயங்க‌...


Image result for increase internet speed



ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் உலா வரும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் வேண்டும் என்று தோன்றுகிறதா? உங்கள் இணைய சேவை நிறுவனத்துடன் மல்லு கட்டுவது தவிர, இணைய வேகத்தை அதிகரிக்கச்செய்யும் எளிய வழிகளை லைப்ஹேக்கர் தளம் பட்டியலிட்டுள்ளது;

l நீங்கள் 4ஜி வசதி பயன்படுத்தினால் ஸ்மார்ட்போன் செட்டிங்கில் 4ஜிக்கு பதில் 3ஜி என மாற்றுவதன் மூலம், சிறந்த நெட்வொர்க்கை தேர்வு செய்து கொள்ளும்.

l இணைய வேகத்தை அதிகரிக்கும் செயலிகளை முயன்று பார்க்கலாம். இலவச செயலிகள் தவிர கட்டண செயலிகளும் இருக்கின்றன.

l ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட தரவுகளை (கேஷ்) சுத்தம் செய்யலாம். ஒரு சில போன்களில் இதற்கான வசதி இருந்தாலும் , சுத்தம் செய்யும் செயலிகளையும் நாடலாம்.

l இணையவாசிகளின் நற்சான்றிதழ் பெற்ற பிரவுசர்களை பயன்படுத்திப்பார்க்கலாம்.

l இணையத்தில் உலாவும் முன் பின்னணியில் இயங்கும் செயலிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கலாம்.

l முக்கியமில்லாத செயலிகளில் ஆட்டோ அப்டேட் வசதியை முடக்கி வைக்கலாம்.

l பின்னணியில் இணைய இணைப்பை பயன்படுத்திக்கொள்ளும் செயலிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். நோரூட் மற்றும் பயர்வால் போன்ற செயலிகளை இந்த கண்காணிப்பில் உதவுகின்றன.

Comments

Popular posts from this blog

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி !

ஏர் மவுஸ் !!

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials