ஃபேஸ்புக் டிவி !

ஃபேஸ்புக் ஏற்கெனவே காட்சி ஊடகத்தின் பாதி இடத்தைப் பிடித்துவிட்ட நிலையில் மீதி இடத்தையும் பிடிக்க திட்டமிட்டுவிட்டது. ஆம், ஃபேஸ்புக் டிவி வரவிருக்கிறது.
ஸ்மார்ட்போன்களும் இணையப் பயன்பாடும் அதிகரித்துள்ள நிலையில் ஃபேஸ்புக்தான் சமூக வலைதளங்களின் பிக்பாஸாக விளங்கிவருகிறது. அதுமட்டுமல்லாமல் வீடியோக்கள், விளம்பரங்கள் அதிக அளவில் ஃபேஸ்புக் மூலமாகவே மக்களைச் சென்றடைகின்றன. இதனால் டிவி ஓடிக்கொண்டிருக்கும்போதும் ஃபேஸ்புக்கில் விடியோக்களை ரசிப்பவர்கள்தான் அதிகம்.
இந்நிலையில் இதுவரை தொலைக்காட்சிகளுக்குப் போட்டியாக மட்டுமே இருந்துவந்த ஃபேஸ்புக் தளம் இனி தொலைக்காட்சிகளின் இடத்தையே முழுமையாக ஆக்கிரமிக்க முடிவெடுத்துள்ளது.
Comments
Post a Comment