அலர வைக்கும் அலாரம்
ஸ்மார்ட் போனுக்குள் இருந்தபடி துயிலெழுப்ப உதவும் அலாரம் செயலிகள் தான்
எத்தனை வகை. இப்போது அலார்மி எனும் புதியதொரு அலாரம் செயலியும்
சேர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகவும் எரிச்சலுட்டக்கூடிய துயிலெழுப்பும்
செயலி என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெழுப்பும் நேரத்துக்குச் சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றதுதான். ஆனால் இது ஒலிக்கத் தொடங்கிய பின் இதைச் சாதாரணமாக நிறுத்திவிட முடியாது.
இந்த அலாரம் செயலி தினமும் காலையில் துயிலெழுப்பும் நேரத்துக்குச் சரியாக ஒலிக்கும். அந்த வகையில் இது மற்ற செயலிகள் போன்றதுதான். ஆனால் இது ஒலிக்கத் தொடங்கிய பின் இதைச் சாதாரணமாக நிறுத்திவிட முடியாது.
அதனால் அது தன்னை எரிச்சலூட்டும் செயலி என்கிறது. பொறுப்பாக அலாரம் வைத்துவிட்டு அதைவிடப் பொறுப்பாக அதை அணைத்து விட்டு தூங்கிவிடுபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment