காப்பி பேஸ்ட்... இனி ஈஸி!
பல காரணங்களினால் இணையதளங்களின் உள்ளடக்கத்தின் சில பகுதிகளை காப்பி,
பேஸ்ட் செய்யும் அவசியம் ஏற்படலாம். நல்ல தகவல்களை மேற்கோள் காட்டவும்,
மெயிலிலும் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொள்ளவும் இந்தத் தேவை ஏற்படலாம்.
இதற்கு முதலில் மேற்கோள் காட்ட வேண்டிய பகுதியை மவுஸ் கொண்டு செலக்ட் செய்ய வேண்டும்.
இதற்கு முதலில் மேற்கோள் காட்ட வேண்டிய பகுதியை மவுஸ் கொண்டு செலக்ட் செய்ய வேண்டும்.
இதைவிட ஓர் எளிய வழி இருக்கிறது. செலக்ட் செய்ய வேண்டிய வார்த்தை மீது மவுசால் டபுள் கிளிக் செய்தால் அந்த வார்த்தை செலக்ட்டாகிவிடும். நீளமான பத்தியை செலக்ட் செய்ய வேண்டி இருந்தால், பத்தியின் தொடக்கத்தில் உள்ள வார்த்தை மீது இரட்டை கிளிக் செய்து விட்டு, பின்னர் ஷிப்ட் கீயை அழுத்திய படி, பத்தி முடியும் வார்த்தையில் டபுள் கிளிக் செய்தால் போதும். பத்தி என்றல்ல.. பல பக்கங்களை காப்பி செய்யவும் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
இதேபோல தேர்வு செய்த பத்தியின் நடுவில் சில வரிகள் இல்லாமல் முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும் செலக்ட் ஆக, கண்ட்ரோல் கீயை அழுத்திய படி செலக்ட் செய்து கொள்ளலாம்
Comments
Post a Comment