Posts

Showing posts from December, 2017

HACK ANY WEBSITE "PHISHING ATTACK" in tamil

Image

(Phishing)ஃபிஷிங் தாக்குதலில் இருந்து எப்படி பாதுகாப்பது

Image

மறையும் ரயில்

Image
ஜப்பானைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் கண்ணுக்கு தெரியாத வகையிலான ரயில் வடிவமைப்பை வெளியிட்டுள்ளார். வெளிப்பகுதியில் உள்ள சூழலை பிரதிபலிப்பதால் இந்த ரயில் வருவதே தெரியாது. ஆனால் உள்பக்கமிருந்து பார்க்க முடியும்.

சுருளும் பாட்டில்

Image
உறுதியான அதே சமயத்தில் சுருட்டி வைத்துகொள்ளும் தண்ணீர் குடுவை இது. அதிக குளிர்ச்சி, அதிக வெப்பத்தையும் தாங்கும். மொத்த குடுவையும் எலாஸ்டிக் போல இழுக்கலாம். தேவையெனில் பர்ஸையும் உள்ளே வைத்து மூடலாம்

காற்றை உறிஞ்சும் கருவி

Image
நமது பயணங்களின் தேவைக்கு ஏற்ப அதிக துணிகளை எப்போதுமே எடுத்துச் செல்லமுடியாது. காரணம் எவ்வளவு பெரிய பை என்றாலும் குறிப்பிட்ட அளவுக்குத்தான் உடைகளை வைக்க முடியும். அதிக உடைகள் தேவை என்றால் பெரிய பைகளை சுமக்க வேண்டியிருக்கும். அதற்கு தீர்வு காணும் கருவி இது. பெரிய பிளாஸ்டிக் பையில் உடைகளை அடைத்தபிறகு இந்த கருவியை நுழைத்து அதிலிருந்து காற்றை உறிஞ்சி விடலாம். இதன் மூலம் பை 50 சதவீதம் சுருங்கிவிடும். இது பேட்டரி மூலம் இயங்குகிறது.

பொருள் புதுசு

Image
இயந்திர கை ஒரு கை செய்யும் வேலையை இரண்டு இயந்திர கைகள் மூலம் செய்ய வைக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இத்தாலி விஞ்ஞானிகள். இயந்திர கை என்ன செய்ய வேண்டும் என்கிற கட்டளையை மூளை நமது கைகளுக்கு அளிக்கும். நமது கைகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இயந்திர கை செயல்படும். அதாவது மனித மூளையின் கட்டளையை செயல்படுத்தும் இயந்திர கை என்கிற அடிப்படையில் உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் ஒரு கையை கொண்டு பல இயந்திர கைகளுடன் வேலை பார்க்கலாம். நடக்கும் ரோபோ ரஷியாவை சேர்ந்த ரோபோ வடிவமைப்பு நிறுவனம் பல கால்களுடன் நடக்கும் ரோபோவை வடிவமைத்துள்ளது. இந்த ரோபோவை மேம்படுத்துவதன் மூலம் அலுவலகம் மற்றும் வீட்டு உபயோக சாதனமாக இதைப் பயன்படுத்தலாம். சிறிய சாலைகள் மற்றும் ஷாப்பிங் செல்கையில் கட்டளைக்கு ஏற்ப மனிதர்களின் பின்னாலேயே நடந்து வரும். குரல் கட்டளைக்கு ஏற்ப நான்கு திசைகளிலும் நடக்கிறது. மனிதர்களைப் போலவே மாடிப்படிகளில் ஏறி இறங்கும். ரஷ்யாவில் நடந்த சர்வதேச மாணவர் திருவிழாவில் இதைக் காட்சிபடுத்தியுள்ளனர்.  

ஏழை நோயாளிகளுக்கு உதவும் 'ஆன்லைன் வைரல்' போக்கு!

Image
பணத்தை வெறுமனே வைத்திருப்பதால் ஒரு பயனும் இல்லை, அது மற்றவர்களுக்குப் பயன்பட்டால்தான் அது பணம். அந்த வகையில் தொழில்நுட்பத்தின் உதவியோடு பணத்தை வசூலித்து, நோயாளிகளுக்கு சிகிச்சையாக வழங்கி வருகிறது கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவர் குழு. சமூக வலைதளங்களில் தகவலை வைரலாகப் பரப்பும் போக்குதான் இதற்கு உறுதுணைபுரிகிறது. நிதியுதவி செய்யக்கூடிய தன்னார்வலர்களால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது குழந்தை மற்றும் முதியோர் பராமரிப்பு அறக்கட்டளை. இதன் உறுப்பினர்கள் அனைவரும் ஹுபள்ளி, கலபுராகி, பெங்கரூவில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முன்னாள் மாணவர்கள். சுமார் 100 பேரைக் கொண்ட இக்குழு மூலம் சிகிச்சைக்கு தேவையான பணம் வசூலிக்கப்படுகிறது. இவர்கள் வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களின் உதவியோடு பணத்தைச் சேகரித்து வருகின்றனர். இந்த மருத்துவர்கள் கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 50 நோயாளிகளுக்கு உதவி செய்திருக்கின்றனர். நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கத...