காற்றை உறிஞ்சும் கருவி
நமது பயணங்களின் தேவைக்கு ஏற்ப அதிக துணிகளை எப்போதுமே எடுத்துச் செல்லமுடியாது. காரணம் எவ்வளவு பெரிய பை என்றாலும் குறிப்பிட்ட அளவுக்குத்தான் உடைகளை வைக்க முடியும். அதிக உடைகள் தேவை என்றால் பெரிய பைகளை சுமக்க வேண்டியிருக்கும். அதற்கு தீர்வு காணும் கருவி இது. பெரிய பிளாஸ்டிக் பையில் உடைகளை அடைத்தபிறகு இந்த கருவியை நுழைத்து அதிலிருந்து காற்றை உறிஞ்சி விடலாம். இதன் மூலம் பை 50 சதவீதம் சுருங்கிவிடும். இது பேட்டரி மூலம் இயங்குகிறது.
Comments
Post a Comment