இந்தியாவுக்கு வந்துவிட்டது 'வாட்ஸ்அப் பிசினஸ்'



வர்த்தகம் செய்வோர் தங்களின் வாடிக்கையாளர்களுடன் சிறப்பாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தகவல் தொடர்புகளை வைத்துக்கொள்ளவும் பேஸ்புக்கின், வாட்ஸ்அப் நிறுவனம் 'வாட்ஸ்அப் பிசினஸ்' என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஆன்ட்ராய்ட் மொபைல் போன் வைத்துள்ளவர்கள் இந்த செயலியை(ஆப்ஸ்) கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செயலி மூலம் சிறு, குறு, நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை எளிதாக தொடர்பு கொண்டு, வர்த்தகம் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அதேசமயம், இந்தியாவில் ஆப்பிள் மொபைல் போனில் பயன்படுத்தக் கூடிய வாட்ஸ்அப் பிசினஸ் ஆப்ஸ் இன்னும் வரவில்லை. ஆப்பிள் போன் பயன்படுத்துபவர்கள் இந்த செயலியை பயன்படுத்த தனியாக ஒரு வாட்ஸ்அப் கணக்கை தொடங்கவேண்டும்.

இது குறித்து ஃபேஸ்புக் நிறுவனமான வாட்ஸ்அப் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
உலக அளவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மக்கள், தங்களின் சிறு தொழில்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் பிசினஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆன்லைன் ஆடை விற்பனை முதல் பிரேசிலில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரை வாடிக்கையாளர்களுடன் இதன் மூலம் தொடர்பில் இருக்கலாம்.
இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்களுடன் எளிதாக தொடர்பு வைத்து வேகமாக, வர்த்தக பரிமாற்றத்தை வைத்துக்கொள்ள முடியும். தங்களின் பொருட்கள் குறித்த விவரங்கள், விலை, சிறப்பு அம்சங்கள், புகைப்படங்கள், புதிய வருகை ஆகியவை குறித்தும், இணையதளங்கள் குறித்த குறிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து நிறுவனங்கள் வர்த்தகத்தை வளர்க்க முடியும்.

வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தல், வர்த்தகத்தை வளர்க்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவர வாழ்த்துச் செய்திகள் அனுப்புதல் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்தி வரும் மக்கள் புதிதாக எதையும் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. கூகுள் ப்ளே ஸ்டோரின் மூலம் அப்டேட் செய்தால்போதுமானது.

பாதுகாப்பான வழிமுறைகள் கொண்டுள்ள இந்த வாட்ஸ்அப் பிசினஸில் எந்த மொபைல் எண்ணையும் பாதுகாப்பு கருதி தடுக்க முடியும், கட்டுப்படுத்தவும் முடியும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்தோனேசியா, இத்தலி, மெக்சிக்கோ, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 'வாட்ஸ்அப் பிசினஸ்' அறிமுகப்படுத்தபட்டது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials

Encrypted smartphones secure your identity, not just your data

அலர வைக்கும் அலாரம்