சாக்லெட் கம்ப்யூட்டர்

கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனத்தை சாக்லெட் சைஸ் சாதனம்
என்றுதான் தொழில்நுட்ப உலகில் வர்ணிக்கின்றனர். இந்த குரோம்பிட்
(Chromebit) சாதனம் ஒரு உடனடி கம்ப்யூட்டர். குரோம் இயங்குதளம்
அடிப்படையிலான இந்த டாங்கில் சாதனம் எந்த ஒரு டிவியையோ அல்லது லேப்டாப்பையோ
குரோம் பிசியாக மாற்றிவிடக் கூடியதாம்.
சாக்லெட் பார் சைசுக்கு இருக்கும் இந்தச் சாதனம் 100 டாலர் விலைக்குள் முழு கம்ப்யூட்டர் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. இதை இணைப்பதன் மூலம் எந்த டிஸ்பிளேவையும் கம்ப்யூட்டராக மாற்றலாம். ஏற்கனவே உள்ள கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பை மேம்படுத்தவும் இது உதவும்.

இந்த வகையான குட்டி கம்ப்யூட்டர்கள்தான் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருப்பதாக வல்லுநர்கள் அடித்துச்சொல்கின்றனர். இண்டெல் நிறுவனமும் இது போன்ற ஒரு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

Comments
Post a Comment