பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் !



Image result for bmw e scooter



நியூயார்க்: புகழ்பெற்ற பி.எம்.டபுள்யூ மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த ஆண்டில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. பி.எம்.டபுள்யூ மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு சூப்பர் சார்ஜிடு ஆர்5, கான்சப்ட் 90 போன்ற பெயர்களில் பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை பின்பற்றி பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிடுகிறது. முன்னதாக இத்தாலியில் பழங்கால கார்களுக்கான கண்காட்சி ஒன்றில் நடைபெற்றது. அப்போது பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.


Image result for bmw e scooter



ஸ்கூட்டரின் சிறப்பம்சம்

இதில் சிராமிக் எல்.இ.சி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சம் உள்ளது. தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது. டிஸ்பிளேவில் வண்டியின் வேகம், போகும் பாதை மற்றும் ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும். மேலும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை குறித்த விவரங்களை விரைவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Online Privacy: Free or Paid?

8 privacy tools that will keep you safe online

Encrypted smartphones secure your identity, not just your data