ஹேக் பண்ண முடியாத ஸ்மார்ட்ஃபோன் !!

Image result for turing robotics smartphone


அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் புதிதாக ஒரு ஸ்மார்ட் ஃபோன் தயாரிக்கப்பட்டுவருகிறது. இதை ஹேக் பண்ண முடியாது. இது வாட்டர் புரூஃப் வசதி கொண்டது. இது மட்டுமல்ல லிக்யூட்மார்ஃபியம் என்னும் மிக உறுதியான உலோகக் கலவையிலானது.

 இந்த உலோகக் கலவை டைட்டேனியம், ஸ்டீல் ஆகியவற்றை விட உறுதியானது. 5.5 அங்குலத் திரை கொண்டது. பயனாளியின் கைரேகையைக் கொண்டே இதன் இயக்கத்தைத் தொடங்க முடியும். டரிங் ரோபாடிக் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் இதை தயாரிக்கிறது.

நீர்புகாத் தன்மை கொண்டது என்பதால் சீல் வைக்கப்பட்டிருக்குமோ எனச் சந்தேகப்பட வேண்டாம். நீர் உள்ளே போகும் ஆனால் எளிதில் உலரும் வகையில் நானோ கோட்டிங் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இது உருவாக்கப்படுகிறது.


Comments

Popular posts from this blog

Online Privacy: Free or Paid?

உலகின் விலை உயர்ந்த பைக்

3.2 மில்லியன் இந்திய Debit cards Hack செய்யப்பட்டுள்ளது !