ஸ்வீடனுக்கு கால் செய்யவும்!
ஸ்காண்டினேவிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால் என்ன செய்வீர்கள்? கூகுளில் தேடிப்பார்ப்பதுதான் பரவலாக அறியப்பட்ட வழி. அதைவிட அருமையான சுவாரஸ்யமான வழி ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. அது ஸ்வீடன் நாட்டுக்கே கால் செய்து பேசுவதுதான். ஸ்வீடனுக்கு எப்படி கால் செய்வது என்று அல்லது எந்த எண்ணை அழைப்பது என நீங்கள் குழம்பலாம். ஆனால் இதற்காக என்றே ஸ்வீடன் சுற்றுலாத் துறை ஒரு பிரத்யேகத் தொலைபேசி எண்ணையும் அதற்கான இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது. ‘தி ஸ்வீடிஷ் நம்பர்’ எனும் இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்கு யார் வேண்டுமானால் அழைத்துப் பேசலாம். அந்த அழைப்புக்கு யாரவது ஒரு சராசரி ஸ்வீடன்வாசி பதில் அளிப்பதுபோல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்வீடன் பற்றி அவரிடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுப் பதில் பெறலாம். வழக்கமான அலுப்பூட்டக்கூடிய சுற்றுலாத் தகவல்களுக்கு மாறாக சராசரி ஸ்வீடன் மக்களைத் தொடர்புகொண்டு பேசும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இவை கட்டணமில்லா அழைப்புகள் அல்ல, சர்வதேசக் கட்டண...